இதன் ஒவ்வொரு வரிகளிலும், குறைந்தது ஒரு நபராவது அல்லது ஒரு நண்பராவது நிச்சயம் பிரதிபலிக்க கூடும்.. உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...

கோவில் வாசலில்
சிந்தி கிடக்கும் பூக்களை போல
கல்லூரி வாசலில் நட்புகள்
ஒற்றை மழைத்துளியில்
ஓராயிரம் பச்சைப் புற்கள்
எப்படி முளைத்திருக்கும்...
புல் நுனியில்
அமர்ந்திருக்கும்
ஒற்றைப் பனித்துளிதான்
எம் நட்பு...
உன்னை நானும்
என்னை நீயும்
முதல் முறை
பார்த்துக் கொண்டோம்..
அப்போது தான்
பூத்திருக்கவேண்டும்
இந்த நட்பு....
மழையும் வெயிலும்
சந்தித்தால் வானவில்...
நானும் நீயும்
சந்தித்ததால் நட்பு..
பாலர்வகுப்பில்
ஒற்றை ஊஞ்சலுக்காய்
அடிபட்டுக்கொண்டோம்,
திடீரென விலகினாய் அப்போதே
முழுமை அடைந்துவிட்டது
எம் நட்பு
அற்ப விசயங்களுக்கும்
சண்டை பிடித்தோம்...
நட்பு பலமடைந்தது...
அதிக விசயங்களுக்கு
சண்டை பிடிக்காதிருந்தோம்
நட்பு இன்னும் பலமடைந்தது...
போட்டி போட்டு
பொய் சொல்லியிருக்கிறோம்
உன்னை நானும்
என்னை நீயும்
காப்பாற்றிக்கொள்ள...
பொய்களை காப்பாற்ற
எத்தனை கதைகள்
நீ சொல்லியிருக்கிறாய்...
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..
என் கற்பனைகளின் நாயகன் நீ...
அப்பாவின் திட்டுக்களை விட
உனது மௌனம் அர்த்தமானது...
அம்மாபோல் என்மேல்
அதிக அக்கறை கொண்டவன் நீ ...
நட்பை தவிர அத்தனையும்
கடனாய் பெற்றது தான்
உன்னிடமிருந்து...
உன்னிடம் நான் மறைத்தது
என் அந்தரங்கங்கள் மட்டும் தான்..
என்னோடு
பேசுவது மட்டும் இல்லை
எனக்காக
பேசுவதும் நீ தான்...
பெயர்கள் சேகரித்துக்கொண்டு
திரிந்த அந்த முதல் நாள்...
உன்னை நானும்
என்னை நீயும்..
புகைப்படம் எடுத்த
அந்த முழு நாள்..
கையில்
நினைவுக் குறிப்பேட்டுடன்
அலைந்த இறுதிநாள்...
உனக்கான இறுதிக் கவிதை..
இப்போதும் இசைக்கின்றது...
ஏதோ அனுபிக்கொண்டிருந்தோம்
கடதாசியிலாவது ராக்கெட்கள்..
ஏதோ கட்டிகொண்டிருந்தோம்
மட்டையிலாவது கப்பல்கள்...
வகுப்பில் படித்ததை விட
உன்னிடம் படித்தது அதிகம்...
இருளிலும் மின்னியவன் நீ...
நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்...
மதங்கள் நட்பானது...
ஜாதிகள் நட்பானது...
உனது காதலுக்காய்
துது போன அந்த நாட்கள்...
என் காதலியிடம் உனக்காய்
துது போன அந்த நாட்கள்...
அத்தனையும் அழகு தான்...
கல்லுரி சுவர்க்கம்
சந்தோசத்தின் மறு வடிவம்...
ஒற்றை குழாயில்
குளித்திருக்கிறோம்...
எம்மோடு குளித்தது நட்பு...
ஒரே தட்டில்
உண்டிருப் போம்...
எம்மோடு உண்டது நட்பு...
ஒரே அறையில்
உறங்கியிருக்கிறோம்...
எம்மோடு உறங்கிது நட்பு...
ஆடை மாற்றி
உடுத்தியிருக்கிறோம்...
எம்மை சுற்றியிருப்பது
இப்போதும் நட்பு....
வானம் அழகாக இருப்பது
வெளிச்சத்தில் மட்டும் அல்ல
இரவுகளில் நிலாவினால்...
பகலில் சூரியனால்...
வாழ்க்கை அழகாக இருப்பது
சந்தோசத்தில் மட்டும் அல்ல
துக்கத்திலும் உன்னால்....
தோல்வியே உனக்கில்லை
நீ இருக்கிறேன் என்றாய்
ஒவ்வொரு நொடியும்
புதிதாய் பிறந்தேன்..
தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...
புதிதாய் பிறந்தேன்..
தோள் தாங்க நீ வாருவாயேன்றால்
வீழ்வதற்கு நான் தயார்...
இன்று
விழாக்களில் உன்னைக்காண்கிறேன்...
தெருக்களில் உன்னைக்காண்கிறேன்...
முற்றிலுமாய் மாறி இருந்தாய்..
நட்புக்கு மரணம் இல்லை
நட்பு என் சுவாசமாகிவிட்டதால்...
இருந்தும்
காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம்...
தமிழ்நிலா
11 comments:
unmai sako!
ninaivukal
pasumai kondathu!
/// அதிக விசயங்களுக்கு
சண்டை பிடிக்காதிருந்தோம்
நட்பு பலமடைந்தது... ///
உண்மை வரிகள்...
/// நட்புக்காய் நாம் உருவாகியது
பாரதி உலகம்
மதங்கள் நட்பானது
ஜாதிகள் நட்பானது...///
பல நண்பர்கள் உள்ளார்கள்...
/// காதல் தோல்விகளை விட
நட்புத் தோல்விகளே
இப்போது அதிகம் ///
இன்னும் அந்த தோல்வி வரவில்லை... வர வேண்டாம்...
சிறப்பான கவிதைக்கு நன்றி... (அப்பாடா... இவ்வளவு நேரம் மின்சாரம் போகாமல் இருந்ததே... மின்சார நண்பனுக்கும் நன்றி...)
அசத்தல் கவிதை!!
மிக்க நன்றி சீனி ஐயா
மிக்க நன்றி தனபாலன் ஐயா
மிக்க நன்றி மைந்தன் அண்ணா
super da
நன்றி theesan
நட்பின் பிரிவுகள் அதிகம் தான் வார்த்தைகளை அற்புதமாக செதுக்கியிருக்கின்றீர்கள்!
மிக்க நன்றி
nice.... i feel like crying.....
அருமை.. நட்புக்கு மரணமில்லை என்றென்றும்..
நன்றி மிக்க நன்றி
Post a Comment