என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??
Showing posts with label குட்டிக்கவிதை. Show all posts
Showing posts with label குட்டிக்கவிதை. Show all posts

பயணத்தில்



நீண்டு கொண்டிருந்த பயணத்தில்
பேருந்து நின்றது...
பயணிகளுக்கு திண்டாட்டம்..
கச்சான் வியாபாரிகளுக்கு
கொண்டாட்டம்...
*****

படைத்தது பிரமன்
படியளப்பது பரமன்..
பாமரா உண்டியலுக்கு
பணம் எதற்கு..???
கடவுளுக்கு ஏன் லஞ்சம் ??
*****

கும்பாபிசேகம் நடந்தது..
பத்து நாளும் நல்ல படையல்..
சாமி சாப்பிட ஆரம்பித்து விட்டால்...??
*****

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

குட்டிக்கவிதை




நான் படித்து வந்தது, 
படைத்தவனுக்கு 
பிடிக்கவில்லை.. 

பேப்பர் பொறுக்குகின்றேன்.. 
என் தம்பி படிப்பதற்காய்..












கோலம் போட்ட வாசலிலே 
இரத்தம் வந்து விழுகிறது... 
கோலம் இங்கு காய்வதற்குள் 
இரத்தம் மீண்டும் நிறைகிறது... 

என்ன இந்த வாழ்க்கையோ...??













கருவில் கண்மூடி கிடந்தோம்..
இரத்தத்தை உணவாக்கினோம்..
கண் திறந்தோம், இரத்தமும் இல்லை..
கண்களை மூடுகிறோம்...

அம்மாவாவது உயிர் வாழட்டுமே என்று..!













ஆண்டுகள் போகின்றது 
அப்பா மட்டும் வரவில்லை.. 
அடுத்த தீபாவளிக்கு வந்துவிடுவார்.. 
அது வரை.. நீங்கள் உறங்குங்கள்...

கற்பனை கனவுகளுடன்...

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

குட்டிக்கவிதை




முகாம்களுக்கும்...
முட்கம்பிகளுக்கும்....
முகாரிகளுக்கும்..
முற்று வைத்துவிடு தோழா...

முழு உலகமும்
இனி உனக்காக தான்...









வாழ்க்கை வெறுத்து 
தற்கொலை செய்ய
துணியும் நீ 

ஒரு நாள் 
மனிதனாக வாழ்ந்து பார். 
உனக்கே உன்னை பிடிக்கும்...









வானம் கேக்கல.. பூமி கேக்கல.. 
காற்று கேக்கல.. தீயும் கேக்கல..
பறவை கேக்கல.. மிருகம் கேக்கல..
மனிதா நீ மட்டும் கேப்பது ஏனோ..

ஊனம் ஒரு குறை அல்ல
அது வாழ்வில் தடை அல்ல...









குடும்பம் நடத்தவும் இல்லை, 

குளோனிங்கும் வளரவில்லை 
குப்பை தொட்டிகளும் 
குளங்களும் -நம் ஊரில் 
குழந்தை பெற்றுக்கொண்டே  இருக்கிறது...

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...