தமிழ் அழகு... தமிழை வாழ்த்தாத கவிக்கு ஏதழகு.. உலகத்தின் மொழியாய் போன தமிழுக்கு ஓர் வணக்கம்.

நதியும் நதியும்
சங்கமிக்கும் கடல் அழகு...
இராகமும் தாளமும்
சங்கமிக்கும் இசை அழகு...
அலையும் மணலும்
சங்கமிக்கும் கரை அழகு...
காற்றும் மரமும்
சங்கமிக்கும் தென்றல் அழகு...
பனியும் மலரும்
சங்கமிக்கும் காலை அழகு..
சூரியனும் தாமரையும்
சங்கமிக்கும் காதல் அழகு....
நட்சத்திரமும் நிலவும்
சங்கமிக்கும் காமம் அழகு...
ஆணும் பெண்ணும்
சங்கமிக்கும் இரவு அழகு....
இதை விட அழகு....
உன் தமிழும் என் தமிழும்
சங்கமிக்கும் இந்த
கவிதை சங்கமம்.....
தமிழ்நிலா 03.2014
0 comments:
Post a Comment