என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

என் அறை.... என்நாளும் எனக்கானது...


என் அறையினை நான் மிகவும் நேசிக்கிறேன்..
நான்கு சுவர்களுடன்,
ஒரே ஜன்னல்... ஒரே வழி...
எல்லாவற்றையும் போல் தான்..
இருப்பினும் எனக்கானது..

சொர்கமாகும்.. நரகமாகும்....
இங்கே சமத்துவம் கற்க முயல்கிறேன்.
என்நாளும் நியாயமானது....
என்னை நானே உணர முயல்கிறேன்..
கனவுகளின் காட்சிக்கூடம்....
எனக்கானவற்றை தேட முயல்கிறேன்..

உள்ளே நுழைந்ததும் கழற்றி
சுவரில் தொங்கவிட்ட முகமூடிகள் ஏராளம்..
இனி நானாகிவிடலாம்... என் சுயம் விழிக்கத்தயார்...
இதோ நானாகியிருக்கிறேன்...

முதலில் உதடுகள் புன்னகைக்கையிலும்,
சுழலில் சிக்கும் நினனைவின் தடம்..
முடிவில் நாத்தீகனாக உறங்குகையிலும்,
எதிரில் முழிக்கும் கடவுளின்படம்..

இது பின்னிரவுகளின் பாடல்..
ஏங்கும் இரவுகளுடன் தூங்கும் தனிமைகள்
எனக்கானவையே...
அர்த்தமுள்ள இரவுகளை பிரசவிக்கும்
சில நேரங்களில்..

இது ..

இருவர் மட்டும் வாழும் இருண்ட உலகம்.
நான்..
என்கூடவே.. தனிமை..
என் அறையினை நான் மிகவும் நேசிக்கிறேன்..
இது எனக்கானது...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

1 comments:

ரூபன் said...

வணக்கம்
அற்புதமான வரிகள் இரசித்தேன்..
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...