என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

மீளுதல் பற்றி..

வாழும் போதே மரித்திட்ட
சிலரில் ஒருவன் நான்...
சில நொடிகளில்,
நீளும் நிமிடங்களில்...
அத்தனை கால அளவுகளிலும்...
இன்னும் எல்லாவற்றிலும்...

உயிர் இழத்தலை விட
உணர்விழத்தலே மரணம்...
சில பார்வைகளில்...
சிலவற்றை பார்க்கையில்...
சில கேள்விகளில்..
சிலவற்றை கேட்கையில்..
இன்னும் இவைகள் ஒருங்கிணைகையிலும்...

இப்போதெல்லாம் மீளுதல் பற்றி
ஒரு எண்ணம்...
எதிலிருந்தேனும்... இப்போதே...
இருப்பினும் அதிகமாய் இழக்கப்பட்டிருந்து...
இனி இழந்தவற்றை மீட்டல் பற்றியும்
இருக்கலாம்...
எப்படியாயினும் இதிலிருந்து
மீளுதல் பற்றியே எண்ணம்....

#தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...