என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

அதே இடம்... அதே நேரம்...


இன்றும் கடக்க நேர்ந்தது
அன்று நான் கழற்றி எறிந்த
எனதை...
அதே இடம்...
அதே நேரம்...

சிதைந்திருந்தது
சிதைக்கப் பட்டிருந்தது...
பல பாதங்கள் பட்டிருக்க வேண்டும்..
உருகி உருக்குலைந்திருந்தது..
பல பருவங்கள் கடந்திருக்க வேண்டும்..

மீண்டும் சேர்ந்துவிட கேட்டது..
நிராகரித்து விட்டேன்...
ஒட்டிவிட முயன்றது...
அன்றைய நிராகரிப்புகளின்
இன்றைய நிலவரங்களில்
எனக்கு உடன்பாடில்லை..

நான் இருள்களால்
ஒளியூட்டப்பட்டவன்...
கலைந்தவை கலந்தாலும்
கடந்தவை இழந்தவைதானே...
இன்னொரு மாற்றம் அது 
இனி என்றுமே இல்லை..

இன்றும் கடந்து சென்றேன்..
அன்று நான் கழற்றி எறிந்த
என் முகத்தை...
அதே கல்லூரி வாசல்...
அதே காலை..

தமிழ்நிலா

நந்தலாலா இணைய இதழ் 2014 March 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

Anonymous said...

வணக்கம்

கவிதை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

கலைந்தவை கலைந்தாலும்
கடந்தவை இழந்தவை தானே...

மனம் தொட்ட உண்மை வரிகள்...

வாழ்த்துக்கள்...

sanjay Thamilnila said...

நன்றிகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...