என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

விபச்சாரி ஆகியிருப்பேன்...


சிறு வயதில்
பெற்றோர்கள் பிரிந்தார்கள்,
ஒரு வயதில்
நண்பர்களும் மறந்தார்கள்,

மனம் மட்டும் போதும் என்ற
காதலன் கற்பமாக்க நினைத்தான்,
குணம் மட்டும் போதும் என்ற
கணவன் கொன்றுவிட துணிந்தான்,

என்னில் ஊனம் இருந்ததால்
காமுகன் தொட்டுவிட மறுத்தான்,
வளர்த்தவர்களும் என்னை
வரும் வழியில் வெறுத்துவிட...!!

கையில் காசின்றி
கன்னியாய் நான் இருந்தும்,
பிச்சைக்காரி வேசம் கொண்டு
தெருவெல்லாம் திரிகின்றேன்...

பேருந்தில் நான் ஏற
இறங்கடி என்கிறார்கள்...
வீடுகளுக்கு நான் சென்றால்
கள்ளி என கலைக்கிறார்கள்...

வெள்ளை தோல் இருந்து
அங்கம் நிறைந்திருந்தால்
விபச்சாரி ஆகியிருப்பேன்...

தம் பசி போக்க வரும்
பண புள்ளிகள் தரும் காசில்
என் பசியை போக்கியிருப்பேன்...

(ஊனம் ஒரு குறை அல்ல,
அது வாழ்வில் தடை அல்ல..!)

தமிழ்நிலா  

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...