என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

வர "தட்சணை"

வர "தட்சணை" கேக்கும், ஆண்மை இல்லாத ஆண்களினால் பாதியிலே நின்றிடும் பலரது மூச்சு



னக்கு பின் தாரம்
வேணும் என தாயவள்
தொடர்ந்தாள் தேடல்
பயணத்தை...
பெண் தேடி அலைந்தாள்
பையனுக்கு பெருமையுடன்..

முத்தரின் மூத்த மகளுக்கு
தன் மகனை மணமுடிக்க
முடிவெடுத்த முத்தம
சம்பந்தம் செய்ய
நாள் குறிச்சு
காத்திருந்தாள்....

ஒருவழியா பேச்சுக்கு
வந்தது கல்யாண வியாபாரம்..
ஏலத்தில் விடப்பட்ட 
மாப்பிளைக்கு முதல் விலையே..
முப்பது லட்சம்...

காணி, வீடு, நகை எண்டு 
நீண்டுது கணக்கு...
எப்படியும் 50 தேறும் 
என்று நினைச்ச முத்தருக்கு
மூச்சு இழுத்து
முடிஞ்சது பேச்சு..

முத்தான சொத்து 
மூன்று பொண்ணுக்கும்
வாயை கட்டி வயித்தை கட்டி
சேர்த்த பத்தில் முடிஞ்சது
ஜந்து.. முத்தரின் செலவுக்கு..

சீதன கொடுமையால் 
சிதைவுறும் சீத்தாகளுக்கு 
ராமர்கள் கேக்கவில்லை
இராவணர்கள் வேண்டாம் இங்கே....

தமிழ்நிலா  
(04/11/2012) உதயன் பத்திரிக்கையில் வந்த எனது கவிதை. 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...