முகாம்களுக்கும்...
முட்கம்பிகளுக்கும்....
முகாரிகளுக்கும்..
முற்று வைத்துவிடு தோழா...
முழு உலகமும்
இனி உனக்காக தான்...
வாழ்க்கை வெறுத்து
தற்கொலை செய்ய
துணியும் நீ
ஒரு நாள்
மனிதனாக வாழ்ந்து பார்.
உனக்கே உன்னை பிடிக்கும்...
வானம் கேக்கல.. பூமி கேக்கல..
பறவை கேக்கல.. மிருகம் கேக்கல..
மனிதா நீ மட்டும் கேப்பது ஏனோ..
ஊனம் ஒரு குறை அல்ல
அது வாழ்வில் தடை அல்ல...
குடும்பம் நடத்தவும் இல்லை,
குளோனிங்கும் வளரவில்லை
குப்பை தொட்டிகளும்
குளங்களும் -நம் ஊரில்
குழந்தை பெற்றுக்கொண்டே இருக்கிறது...
0 comments:
Post a Comment