நான் படித்து வந்தது,
படைத்தவனுக்கு
பிடிக்கவில்லை..
பேப்பர் பொறுக்குகின்றேன்..
என் தம்பி படிப்பதற்காய்..
கோலம் போட்ட வாசலிலே
இரத்தம் வந்து விழுகிறது...
கோலம் இங்கு காய்வதற்குள்
இரத்தம் மீண்டும் நிறைகிறது...
என்ன இந்த வாழ்க்கையோ...??
கருவில் கண்மூடி கிடந்தோம்..
இரத்தத்தை உணவாக்கினோம்..
கண் திறந்தோம், இரத்தமும் இல்லை..
கண்களை மூடுகிறோம்...
அம்மாவாவது உயிர் வாழட்டுமே என்று..!
ஆண்டுகள் போகின்றது
அப்பா மட்டும் வரவில்லை..
அடுத்த தீபாவளிக்கு வந்துவிடுவார்..
அது வரை.. நீங்கள் உறங்குங்கள்...
கற்பனை கனவுகளுடன்...
0 comments:
Post a Comment