என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

கடலம்மா கடலம்மா....உலகத்தின் அதிசயங்களை அழிக்க வந்த சுனாமி ஒரு அதிசயம்..
உயிர் இழந்த உறவுகளுக்கு ஒரு நிமிடமேனும் அஞ்சலி செய்வோம் கவியோடு.. ன் அழகை பாட வந்தவனை
பாய்ந்தோட விட்டு விட்டாய் ..
ஓய்வெடுக்க வந்தவனை
உன் வீடு கூட்டி சென்றாய்..
சாதி சனம் பாக்காம நீ
தரையோட இழுத்து போனாய்...!

கடலம்மா கடலம்மா

உன் உடம்போடு உள்ள
உப்பு போதலையா..
கண்ணீரில் உப்பெடுக்க
கரைக்கு நீ வந்து விட்டாய்....!

உன்னோடு வாழும்
உயிர் கூட்டம் போதல என்றா
எம் உயிர் எடுக்க நீ
விரைந்து வந்தாய்....
உயிரற்ற உடம்பை விட்டு போகாம
அதைகூட உண்டு
உன் பசி போக்கிவிட்டாய்...!

கண் விளிக்கா நேரத்தில்
கடலே நீ வந்துவிட்டாய்...
பாயோடு எம்மை கொன்று விட்டாய்...
தொட்டிலில் கிடந்த பிள்ளையை
மாடத்தில் கொழுவ வைத்தாய் ..!

உற்றவளை காப்பாற்ற
பெற்றவளை இழுத்து விட்டாய்..,
மரத்தில் நான் ஏற மரத்தை
நீ முறித்துக் கொண்டாய்...!

உன் செல்வம் எடுத்ததாலா
எம்மை நீ பகைத்துவிட்டாய் ...
உன் அழகை ரசித்ததாலா
நீ எம் உயிரை பறித்துவிட்டாய். ...!

தமிழ்நிலா 26-Dec-2005


காற்றுவெளி januvary 2011

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...