என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

இன்னமும் இருக்கிறார்கள்...


இன்னமும் இருக்கிறார்கள்...

சில கண்ணகிகள்
சில சீதைகள்
சில தமயந்திகள்
சில சகுந்தலைகள் 

இலக்கிய புத்தகங்களில்...
தமிழ் பாடப்பரப்புகளில்..
கவிஞர்களின் கற்பனையில்..
மட்டுமே...  ஆனால்..  அதிகம்...

மாதவியை நாடும் 
கோவலர்களும்...
வீட்டுவாசம்  அனுப்பும் 
ஸ்ரீ இராமர்களும் ...
மனைவியை விற்றுவிடும் 
நள மகாராஜர்களும் ...
காதலியை மறந்துவிடும் 
துஷ்யந்தன்களும்...


இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.. 
இங்கேயும் இருக்கிறார்கள்..
நிஜ வாழ்க்கையில்...

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
அவர்களெல்லாம் பாடப்புத்தகங்க்களில்
தகவலாக மட்டும் இருக்க
இவர்கள்தான் இயங்க்கிக் கொண்டிருக்கிறார்கள்
அதுதான் உலகம் இப்படி இருக்கிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Sanjay Thamilnila said...

நன்றிகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...