என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

இன்னும் சில நிமிடங்களில்...


காணாமல் போன ஒன்று
யாரும் காணாமல்
கிடக்கிறது
அடித்து, தூக்கி வீசி
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
மறுபடியும் துடிக்கிறது இதயம்..

ஒரு நண்பகலில்
இரத்தம் சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் போய்
தூசி கிளம்பியும்
இன்னும் துடிக்கவில்லை
சிலரது இதயம்..

மாடுகளின் சாணத்தை
சில்லுகள் வாரி அள்ளிச்
செல்வதுபோல்
சிதறிய மிச்சத் சதைகளை
மிதித்து செல்லுகின்றன
வண்டிகள்..

தெருநாய்களும்
கூடிவிட்டன
இன்னும் சில நிமிடங்களில்
மனிதம் செத்துவிடும்..
தூக்கி கரையிலாவது
போட்டுவிட்டு போங்கள்..
காகங்கள்
காவல் இருக்கின்றன..

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

Seeni said...

vethanai..!

Yaathoramani.blogspot.com said...

இதே போன்ற ஒரு நிகழ்வை
நினைவுபடுத்தி வேதனைப் படுத்திப் போனது
தங்கள் கவிதை
வாழ்த்துக்கள்

Sanjay Thamilnila said...

அண்மையில் எங்கள் இடத்தில் நடந்த நிகழ்வு. நான் வெளியூரில் இருந்தேன், கேள்வி பட்டபோது உறுத்திக்கொண்டது மனது.. நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...