தன் உயிரால் எனை உருவாக்கிய என் அம்மாவுக்கும்...

உலகத்தில் உள்ள எல்லா அம்மக்களுக்கும்..
இது சமர்ப்பணம் ....

அம்மா இது என் முதல்
கவிதை அல்ல,
உனக்கான முதல் கவிதை.
உன் காதலால் தான்
நான் விதையானேன்,
தாயே உன் பாசத்தால்
நான் மரமானேன்....!!
உன் உணர்வால் என்னை
உயிராக்கினாய்,
உன் இரத்தத்தை என்
உணவாக்கினாய்,
உன் பாசத்தால் என்னை
உருவாக்கினாய்,
உன் கண்டிப்பால் எமை
உயர்வாக்கினாய்....!!!
எனை பெற்றதால் நீ
தாய் ஆனாய்...!!
நான் உறங்க நீ
தாலாட்டானாய்...!!
துவண்ட போது நீ
தோழி ஆனாய்...!!
சந்தோசத்தில் நீ
தங்கையானாய்...!!
நோயின் போது நீ
தாதியானாய்...!!
பல நேரம் என்
தாய் ஆனாய்... நீ
சில நேரம் என்
மகள் ஆனாய்....!!
உன்னால் நான்
சிலை ஆனேன்,
உன் அன்பால்,
மகன் ஆனேன்....!!
நீ இல்லை என்றால்
என்னாவேன்...???
உன் உடலோடு
நானும் மண்ணாவேன்....!!
உளம் செத்து
நடை பிணமாவேன்..!!
தமிழ் நிலா
0 comments:
Post a Comment