என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

ஒற்றையடிப்பாதையில........


அண்மையில் பத்திரிகையில் பார்த்த செய்தி என்னை ஏதோ செய்தது.. இரு பிள்ளைகளுக்கு தாயான தான் மனைவி இன்னொருவனுடன் போவதை தடுக்க மக்கள் மத்தியில் காலில் விழுந்தாராம்... பாவாம் ற்றையடிப்பாதையில
ஓரமாய் போறவளே......
என் ஒற்றை மனசு கூட
உன் பின்னால போகுதடி....!!!

கன்னியே.... என் மனதை
களவாடி போனவளே......
இந்த காரிருளில்
கையில் பெட்டியுடன் நீ
களவாக போவதெங்கே.....??
உன் பின்னாலே புருஷன் வருகிறனே
ஒருதடவை பாத்தாயா...??
உன்பின்னால ஒரு உருவம் வருதென்று...
ஓரமாயேனும் பாரேண்டி.....

எங்கோ பாட்டு வர நீ 
எச பாட்டு பாடுகின்றாய்.. .
என் இதயம் இசை மீட்குதே.
சோகத்தோடு,.. அது..
காதோடு கேட்கலயா...???
 காரிருளில் என்ன சத்தம்.....??

இந்த நேரத்தில்.... இந்த பாதையில்
வருவது தான் யாரடி...?? வந்தவன்...
கைபோடுகிறான்.... ஏனடி
நீ கூச்சல் போடவில்லை....
அவன்..யாரடி... உன் கணவன் நானடி...??
தாலியை கூட காணவில்லையே....
எனை கழட்டி விட்டாயா...???
சிரிக்கின்றானே.... அவன்
உன் கண்ணாளனா......???

உன் பின்னால வந்த என் மனசு
நொருங்கிப்போனதடி....!!
என் பிள்ளைக்கு என சொல்ல..
உயிரை உறையவைத்த
ஒரு மணிக் காதலியே.....
ஒற்றையடிப்பாதையில ஒரு
குடும்பம் தான் போக......
கண்ணீரால் வாழ்தியபடி ஓரு
இதயம் தான் திரும்ப......
கலைந்து போனது...என்
வாழ்க்கயின் கனவு..!!

தமிழ் நிலா 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...