பூவே இத்தனை அழகு..
உனக்கு எப்படி வந்தது...???
உலகத்தின் முதல்
மழைநாளில்
வானவில் கரைந்திருக்குமோ...
வானத்து ஆழகிகளின்
முத்தங்கள் பட்டிருக்குமோ...
தேவதைகளின் வியர்வை
மண்ணில் சிதறி இருக்குமோ...
என்னவாய் இருக்கும்...??
* * * * * * * * * * * * *
* * * * * * * * * * * * *
காலையில் தானே
பேசிவிட்டு போனேன்..?
ஏன் தரையில் கிடக்கிறாய்..
தலை நானியதால்,
உடல் சோர்ந்ததால்
தூக்கிப் போட்டுவிட்டார்களோ..?
அழகு என்ன நிரந்தரமா...
அழுது விடாதே...
வாழ்வு என்ன நிரந்தரமா...
உன் ஆயுள் சில சில நாள்..
எம் ஆயுள் சில பல நாள்...
அவ்வளவு தான்...
உன் குணம் யாருக்கு வரும்..???
நீ மட்டும் தான் சாதிபார்ப்பதில்லை...
எல்லோர் தலையிலும்
அமர்ந்து கொள்கிறாய்..
நீ மட்டும் தான் மதங்களை
பிரிப்பதில்லை - எல்லா கடவுளின்
பாதங்களிலும் பூஜை செய்கிறாய்...
நீ தான் உண்மையான வள்ளல்..
பூச்சிகளின் பசிபோக்க
தவறியதே இல்லை....
நீ தான் அதிக பொறுமைசாலி..
கொடுமைகள் புரியினும்
சுகந்தம் பரப்புகிறாய்..
உன் தியாகம் எதை மிஞ்சிவிடும்..
வண்டுகள் குத்தி போனாலும்..
தாங்கிக் கொள்கிறாய்...
எலும்பை முறித்து - உன்
தலை கிள்ளி தலையில்
சூடிப்போகையிலும் சிரிக்கிறாய்..
நூல்களில் கட்டி தூக்கும்
இடுகிறார்கள் - சகித்துகொள்கிறாய்..
உன்னில் தான்
ஜேசுவை காண்கிறேன்..
மகாத்மாவை காண்கிறேன்..
மொட்டாய் முடங்கி விட
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???
வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நினைக்கிறாயா..??
விரியக் கூடாதென்று
உறுதியாய் இருக்கிறாயா..???
வேண்டாம், பூவே நீ மலர்...
உன்போல் தான் நானும்..
நாளை மீண்டும் பிறந்து வா...
எனக்கு தோழி வேண்டும்..
தமிழ்நிலா
தமிழ்நிலா
7 comments:
நீங்கள் விரும்புவதை அதிகம் எழுதவும்
இத்தனை ஆழமான சிந்தனையை உள்ளடக்கிய
அழகான கவிதைகள் தமிழுக்கு அதிகம்
வேண்டியிருக்கிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அழகியதொரு கவிதை .
நன்றிகள் உறவுகளே..
அருமை
நன்றிகள் அண்ணா
kavithaikal nantrakave ullana. vallthukal.
nanri ravi sir
Post a Comment