மணல்க்காடு
இயற்கை அழாத காரணத்தால்
கண்ணீர் வற்றிவிட்டது...
நிலம் எல்லாம்
பித்த வெடிப்புக்கள்....
மரங்களுக்கு என்ன நோய்
எலும்பும் தோலுமாக...
இப்படி எரித்தும் மேகம்
கருமையாகவில்லையே...
இயற்கை பயந்திருக்கிறது...
பனிமலை உருகுகிறது,
வேர்த்து வழிகிறது...
என்ன நடந்ததோ
சூரியனுக்கு காச்சல்..
விண்வெளியில்
செய்மதி கண்டிருக்குமோ...
மீன்கள் முச்சு திணறுகின்றன
நுரையீரல் புற்றுநோய்...
கடலுக்குள் கப்பல்
எப்போது கவிழ்ந்தது..
நிலம் எப்படி வெடித்தது..
பூமிக்குள் என்ன சத்தம்
மாரடைப்பு வந்திருக்கும்...
இயற்கை பயந்திருக்கிறது...
விஞ்ஞாத்தினால் இருக்குமோ...
மூச்சு இழுக்கிறது...
பூமித் தாய் மறைந்து விட்டாள்..
அழகான உலகம் இறந்துவிட்டது..
தமிழ்நிலா
2 comments:
நிலம் எல்லாம் பித்தவெடிப்புகள்
பூமிக்கு மாரடைப்பு வித்தியாசமானது.
உங்கள் கவித்திறமை வளர வாழ்த்துக்கள்
நன்றிகள் உறவே
Post a Comment