
மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்துகொண்டிருக்கிறது...
பறப்பவை ஊர்ந்தும்
ஊர்வவை நடந்தும்...
நடப்பவை பாய்ந்தும்
பாய்பவை நீந்தியும்
நீந்துபவை பறந்தும்
இயங்கிக் கொண்டிருந்தன....
அத்தனையும் பூச்சியம்
ஆகும் முதல்
இரண்டாம் உலகம் நோக்கி...
புற்கள்
கிளை விட்டுக்கொண்டிருந்தன...
மரங்கள்
படர்ந்துகொண்டிருந்தன...
கொடிகள்
புணர்ந்துகொண்டிருந்தன...
மரண வாசம் மட்டும் நிரம்பிய
காற்றை சுவாசித்தவாறு
மரணத்தில் இருந்தான
உயிரின் கடைசி துளி
வழிந்திருந்தது...
தமிழ்நிலா



Tody Now
3 comments:
வேதனை வலிகள்...வரிகள்...
mmmmm
நன்றி தனபாலன் ஐயா, நன்றி seeni ஐயா
Post a Comment