இரவு வானம் உடைந்து
விழுந்திருந்தது..
சிதைவுகளுக்கு இடையே
மங்கிய ஒளியில்
மின்னிக்கொண்டிருந்தன
சில நட்சத்திரங்கள்...
நிலவு நீருக்குள் விழுந்து
அணைந்திருந்தது....
மேகங்கள் திட்டுத் திட்டாக
குவிந்து கிடந்தன...
சூரியத் துகள்களின்
வெக்கையில் காடுகள்
எரிந்து கொண்டிருந்தன....
கோரப் பற்கள்
இரத்தம் சுவைத்த நீண்ட நாக்கு...
கண்களில் நெருப்பு
பாம்புத் தலைமயிர்கள்..
பருத்த உடல், நீண்ட கழுத்து
குட்டைக் கால்....
கைகளில் கொடிய ஆயுதம்..
நீண்ட நகங்கள்..
உடல்களில் சிதல் கொண்ட உருவம்திடீரென தோன்றி மறைகிறது...
மெல்ல என்னருகில் வந்து
அமர்ந்து கொண்டது..
திடுக்கிட்டு எழுந்தேன்..
திரும்பிப் படுத்துக்கொண்டேன்..
இல்லாத கடவுளை
இரண்டு முறை வேண்டிக்கொண்டேன்..
மீண்டும் உறங்கிவிட்டேன்..
மீண்டும் மீண்டும் அதே உருவம்..
திடுக்கிட்டு எழுந்தேன்..
திரும்பிப் படுத்துக்கொண்டேன்..
நித்திரை வருவதாய் இல்லை..
கோரம் நிறைந்த அது மட்டும்
மீண்டும் மீண்டும்...
ஏன் இந்த கனவு
ஏதோ நடக்கபோகிறது...
அல்லது..
ஏதோ நடந்திருக்கவேண்டும்..
தமிழ்நிலா
2 comments:
நன்றி..அண்ணா
கனவு பயமுறுத்தியது...
Post a Comment