என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

சே குவேரா - புனிதப் புரட்சியாளன்


அழுக்குத் துணிகள்
லேசான மழுங்கிய தாடி
கண்களில் புன்னகை
புயங்களில் வலிமை
துப்பாக்கி ஏந்திய
ஒரு இளைஞன்
நினைவுக்கு வருவான்...

யார் அவன்?
புரட்சியின் குறியீடு...
முதலாளித்துவத்தின் எதிரி..
மக்களின் விடுதலை விரும்பி...
புனிதப் புரட்சியாளன்..

சே குவேரா
மற்றவரிடமிருந்து மாறுபட்டவன்
என்னிடத்தில் ஒன்று பட்டவன்...
என் சே குவரா இப்படி இருப்பான்

அழகிய துணிகள்
மழிக்கப்பட்ட தாடி...
கண்களில் மாறாத புன்னகை..
நெஞ்சினில் அதே திடம்..
கைகளில் பேனா
வைத்திருப்பான்...

இளைஞர்கள் கோபடுகிறார்கள்
சே தடுத்துவிடுகிறான்...
அநீதியை கண்டு 
ஆத்திரம் வருகிறதா? 
நீயும் என் தோழன்....
துப்பாக்கிகள் போடப்பட்டு
பேனாக்கள் ஆயுதமாகிறது...

வடுக்கள் பெற்றவர்கள்
விருதுகள் பெறப் பழகிக்கொண்டார்கள்
மறைந்து தாக்கியவர்கள்
நேருக்குநேர் தாக்க பழகினார்கள்..
புரட்சி புது வடிவம் பெற்றது...

சே குவேரா
சிலையாகவில்லை.. - இப்போது 
சரித்திரம் ஆனான்...
புரட்சியின் தந்தையாக அல்ல 
புரட்சியின் குழந்தையாக...

தமிழ்நிலா

சே குவேரா (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு வரிகள்... சிறப்பு கவிதை... அருமை...

ஆத்மா said...

சே குவேரா பற்றி நிறையப்பேர் பேச கேட்டுள்ளேன்
அவர் பற்றிய தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது

Sanjay Thamilnila said...

நன்றி தனபாலன் ஐயா, மற்றும் சிட்டுக்குருவி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...