என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

அவர்கள் எங்கே போனார்கள்...



மேகம் உருகி
சொட்டு சொட்டாய்
சிந்திக்கொண்டிருக்கிறது...
இலைகளிலும்
புல்லின் நுனிகளிலும்
சிம்மசனமிட்டிருகின்றன
உருகிய துளிகள்..
வானம் வெளிச்சத்தை உண்டு
தன்னை மறைத்திருந்தது...
நிலவும் உறங்கிவிட்ட இரவு..

இருப்பினும்
கைகளில் கேள்விகள்...
அவர்கள் எங்கே  போனார்கள்
என்ன ஆனார்கள்...
மௌனம் தான்
அத்தனைக்கும் விடை என
தெரிந்திருந்தும்
திரும்பி வர முடியாத
ஒற்றை பாதையில் பயணம்...

கால்களை கூளாம்கற்கள்
கிழித்துக் கொண்டிருந்தன..
இன்னமும் ஆறிப்போகாத
சூடு மண்ணில் தெரிந்தது..
நாய்கள் எதையோ
இழுத்துக்கொண்டிருந்தன..
சருகளில் பாம்புகள்
சரசரத்துக் கொண்டிருந்தன..
எங்கோ கழுகுகள்
சிறகடிக்கும் சத்தம்..

ஒரு பெரிய மயான வெளியில்
மூங்கில்கள் தாமாகவே
இசைத்துக் கொண்டிருக்கின்றன..
ஆனால் அத்தனையும்
நிசப்தமாய் இருந்தது...
எதுவுமே நடக்காதது போல்....

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

4 comments:

Seeni said...

mmmm....

unarthikirathu ...


ethaiyo...

ஆத்மா said...

மூன்றாவது பராவ படித்தவுடேன் ஏதோ ஊள்ளுக்குள் ஒரு மயானத்தின் காட்சி தோன்றி மறைகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்...

முடிவு இது தானே...

Sanjay Thamilnila said...

நன்றி உறவுகளே...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...