காலத்தின் சாக்கடைக்குள்
காதல் கல் வீழ்கிறது..
விழுகையில் ஏற்படும்
நீர் வளையங்கள்
வேலி போடமுயன்றும்
தெறித்த நீர்த் திவலைகள்
கீழே விழமுன்,
ஆழச் சென்று
அடைந்து விடுகின்றது
கூரான அந்தக் கல்..
உள்ளே சில கொத்திப்பார்த்தன..
சில தட்டிப்பார்த்தன..
அசைவதாய் இல்லை..
நாட்கள் நச்சரித்து நகர்ந்து கொண்டன..
கூரான அந்த கல் மழுங்கியது..
வேலிகளுக்கு வெளியே
வழுக்கத் தொடங்கியது..
மகிழ்ந்து தலைதிருப்பி
உன்னிப்பார்த்தது எழுந்துவர..
முடியவில்லை,
அமிழ்ந்து கொண்டது
அந்த சகதிக்குள்...
தமிழ்நிலா
நண்பன் ஒருவனுடன் கதைக்கும் போது மனதில் பதிவாகிய ஒருவிடயம்.. இதில் தவறுகள் இருக்கிறது, உண்மைக் காதலர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்....
3 comments:
ada....
சில காதல் இப்படித் தான் இருக்கு...! அது காதல் அல்ல...
நன்றி நன்றி..
Post a Comment