எழுத்துக்கள்
தூங்கிக்கொண்டிருந்தன..
எப்படிக் கவிதையாவது என்றும்
தெரியாது அதற்கு..
அடிக்கடி என்னைக்
கேட்டுக்கொள்ளும்...
இரண்டு வரிகளை
இணைத்தா...?
அல்லது
இ
ப்
ப
டி
எழுத்துக்களைப் பிரித்தா..?
ஒரு
முழுவரியை
நான்காக
உடைத்தா...?
அல்லது
அலை போல நாபுரளும்
உவமைகளை அடுக்கியா...?
ஆனால் பொய் சொல்வதற்கு
துளியளவும் சம்மதம் இல்லை
என்றது பேனா.... என்ன செய்வது..??
இணைத்தும், பிரித்தும்
அடுக்கியும், உடைத்தும்..
இப்படி எழுதினேன்..
நன்று என்றார்கள்
எழுத்துக்கள் மார்தட்டிக்கொண்டன
நாம் கவிதையென்று...
பொய்ப்புகழ்ச்சி பிடித்துவிட்டது போலும்
பொய்களையே எழுதிக்கொண்டது...
இது கவிதையே இல்லை
என்றார்கள் கவிஞர்கள்
மீண்டும் தூங்கிவிட்டது...
எனது கவிதை...
எழுந்திரு என்றேன்
புரண்டு படுத்துக்கொண்டது
எழுந்துவர விருப்பமின்றி...
தமிழ்நிலா
5 comments:
புரண்டு படுத்துக் கொண்டதாக
உங்கள் எழுத்துக்கள்சொன்னாலும்
வீறுகொண்டல்லவா நிற்கிறது கவிதை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
நண்பரே,
எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதற்கு மிக்க நன்றி. தங்களின் இந்த மின்னஞ்சல் செய்திக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதில் அனுப்புகிறோம். எங்களின் தளத்தில் வந்தமைக்கு மிக்க நன்றி.
வாழ்க தமிழ், வளர்க தமிழ் பற்று.
- தமிழ் களஞ்சியம்
எப்படியோ ஒரு கவிதை கிடைத்து விட்டது... எங்களுக்கு ரசிக்க...
நன்றி..
கவிதையாய் சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் எளிமைத் தனத்தை.....
உங்கள் கவி ரசிக்கக் கூடியது
மிக்க நன்றி உறவுகளே.. உங்களுக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளன என் வரிகள்.. தமிழ்நிலா
Post a Comment