எல்லோருக்கும் பிடித்துப்போகும்
யன்னலோரோ இருக்கைகள்..
விரும்பியும் விரும்பாமலும்
சிலநேரங்களில்
எப்படியோ பறிபோய் விடும்..
கர்ப்பிணிகள் உரிமையுடன்
பெறுகின்றனர்..
முதியவர்கள் அனுதாபத்தில்
பெறுகின்றனர்....
காதலர்கள், நோயாளிகள்,
வயோதிபர், குழந்தைகள்..
யார் வேண்டும் என்றாலும்
இந்த இருக்கையில் இருந்தால்
உலகத்தையே பார்த்துவிடலாம்...
உலகத்தை மறந்தும் விடலாம்..
மழைக்காலத்தில் சாரலையும்
வெயிற்காலத்தில் தென்றலையும்
சில நாட்களில் செம்மண் துசிகளையும்
அள்ளி தந்துவிடும்...
எப்போதும் யாவர்க்கும்
இரசிக்கும் இடமாகவே
இருந்துவந்துள்ளன....
யன்னலோரோ இருக்கைகள்.
எப்போதும் எனக்கும்..!
உலகம் அழகு என்பதை என்
யன்னலோரம் அடிக்கடி சொல்லும்..
உலகம் சிறிது என்பதையும் கூட..
சில நேரங்களில் யாவற்றையும்
இழக்கத்தான் வேண்டும்
இழக்கத்தான் வேண்டும்
எதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும்
என் யன்னலோரோ இருக்கைகள்
அடிக்கடி சொல்லாமல் சொல்லும்...
தமிழ்நிலா
என் யன்னலோரோ இருக்கைகள்
அடிக்கடி சொல்லாமல் சொல்லும்...
தமிழ்நிலா
4 comments:
அருமை தோழரே..
/// உலகம் சிறிது என்பதையும் கூட.... ///
கருத்துக்களுடன் ரசித்தேன்...
அழகான கவிதை....
ஆனால் எனக்கு ஏனோ ஜன்னலோர இருக்கைகள் பிடிப்பதில்லை..... தெரியவில்லை
நன்றி மதுமதி, தனபாலன் ஐயா, மற்றும் சிட்டுக்குருவியின் ஆத்மா..
Post a Comment