உலகம் அழியப்போகிறதா...
யார் சொன்னது..
அழிந்துகொண்டிருக்கிறது..
அதுவும் இல்லை
உலகம் எப்போதோ
அழியத்தொடங்கி விட்டது
அது தான் உண்மை...
நெஞ்சில் ஈரம் என்று காய்ந்ததோ...
கொலை என்று கலை ஆனதோ..
வீரம் என்று துரோகமானதோ..
பொய்கள் என்று உண்மையானதோ..
நேர்மை என்று ஊழல் ஆனதோ...
கற்பு என்று களங்கமானதோ..
இயற்கையை என்று விஞ்ஞானம்
முந்த நினைத்ததோ...
அன்றே அழியத்தொடங்கி விட்டது...
இறக்கப் பயப்படுகிறாயா...
பயப்படாதே
மனிதம் இறந்து நாளாகிவிட்டது..
உடல் வேண்டுமா...
எதுவும் நிரந்தரம் இல்லை
மண்தானே உண்ணபோகின்றது...
வாழ்க்கையும் அது போல் தான்..
வாழப் பழகியவன் தானே நீ...
இருப்பினும் சக்தி ஒன்றே
நிலையானது.... மதங்கள் அல்ல...
மனிதங்களை நேசிக்கும்
அந்த மகத்தனா சக்தி..
உன்னையும் என்னையும்
ஆட்டுவிக்கும் அந்த ஒரே சக்தி..
அதற்க்கு மட்டும் பயப்படு...
புரிந்து கொண்டாய் அல்லவா...
நாளை அழியும் என்பது கூட...
தமிழ்நிலா
3 comments:
யதார்த்தமான வரிகள்
அற்புதம்
அருமையான வரிகள், ரொம்ப அழுத்தமா சொல்லிருக்கிங்க, சபாஷ்!
நன்றி மிக்க நன்றி
Post a Comment