என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

இவர்கள் யார்..?


இவர்கள் யார்..?
புயலை உருவாக்கக்கூடியவர்கள்..
தென்றலுடன் நடக்கிறார்கள்..
அலையாக எழுந்தவர்கள்
ஏனோ சலனமற்றுக்கிடக்கிறார்கள்...
சிறகடித்து பறக்கக்கூடியவர்கள்
தரையினில் நெளிந்து கடக்கிறார்கள்...
வெளிச்சம் படைத்தவர்கள்
இருட்டில் தவழ்ந்து செல்கிறார்கள்...

இவர்கள்...
ஒன்று பத்தாகி, பத்து நூறாகி,
நூறு ஆயிரமாகி, ஆயிரம் இலட்சமாகி,
இலட்சம் கோடியான பின்னும்..
தனியாகவே நடக்கிறார்கள்..

இமயம் இதயம் இரண்டையுமே
பாரமாக தான்  பார்க்கிறார்கள்...
வழி  வலி  இரண்டையுமே
எதற்காகவோ வெறுக்கிறார்கள்...

பலி பழி இரண்டையும் நேசிக்கிறார்கள்..
காதல் காமம் இரண்டையும் கலக்கிறார்கள்..
இப்படி எப்படியோ தடுமாறி நடுக்கிறார்கள்
ஒவ்வொரு நாட்டின் இளைஞர்களும்...

முகவரி இல்லாத முகவுரையுடன்
அலைந்து கொண்டிருக்கும் இவர்கள் தான்
எம் தேசத்தின் நாளைய தலைவர்கள்...

தமிழ்நிலா
காற்றுவெளி March 2013

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளில் அப்பட்டமான பல உண்மைகள்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...