என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

திரும்பிப்பார்



திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...

நிகழ்காலம் எப்போதோ
தோற்றாகிவிட்டது..
நிகழ்ந்தவை அத்தனையும்
உனக்கு எதிரானவையே..
இறந்தகாலம் எதிர்காலத்தை
கவர்ந்து கொள்கிறது..


திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...


தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று என்பது கையில் இருக்கும் வீணை. உடைந்த பானை எதற்குமே உதவாது. அதுபோல் நேற்று முடிந்ததைப் பற்றி நினைப்பதால் எவ்வித பயனும் இல்லை...

///நேற்று என்பது உன் கையில் இல்லை...
நாளை என்பது உன் பையில் இல்லை...
இன்று மட்டுமே மிச்சம் உண்டு தோழா... ///
படம் (உன்னாலே... உன்னாலே...)

Sanjay Thamilnila said...

நன்றி சரியாக சொன்னீர்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...