இரவு நிலவு
இரண்டும் அண்டத்தின்
இரைச்சலை உறுஞ்சி
முடித்திருந்தது..
ஒரு சிலவற்றைத் தவிர..
தெருவோர நாய்..
சில்வண்டுகளின் கூக்குரல்
சில அழுகைகள்..
இன்னும் சில புரியாத அல்லது
புரிந்துகொள்ள முடியாதவைகள்..
மழலையின் காலடி கொண்டு
கிறுக்கல் ஓவியத்தின் வழியே
குப்பி விளக்கின் புகையில்
வர்ணம் பூசப்பட்ட
சில நிழல்கள்..
திரும்ப முடியாத
மரணத்தின் முடிவைத்தேடி
சாவிதொலைத்த அந்த
ஒற்ரைப்பாதையின் ஓரத்து
போதைச் சேற்றில்
தெரிந்தோ தெரியாமலோ விழுந்து
வெப்ப உலகத்தின் கடைசி
நீர்த்துளியையும் குடித்து செரித்துவிட்டு
மூர்ச்சை அற்று கிடக்கின்றன..
இந்த மனித நாற்றுக்கள்..
சில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..
தமிழ்நிலா
காற்றுவெளி May 2013
நீர்த்துளியையும் குடித்து செரித்துவிட்டு
மூர்ச்சை அற்று கிடக்கின்றன..
இந்த மனித நாற்றுக்கள்..
சில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..
தமிழ்நிலா
காற்றுவெளி May 2013
2 comments:
இன்றைக்கு அதிமாகிக் கொண்டிருப்பதோ உண்மை... வருத்தப்பட வேண்டிய விஷ(ய)ம்...
சுற்றுப்புற வர்ணனை சூப்பர்...
நன்றி தனபாலன் சார்
Post a Comment