எனக்கானவை எல்லாம்
உன்னிடம் இருந்து
கிடைக்கப்பெற்றவை..
என்னிடம் இருந்தும் சிலவற்றை
நீ எடுத்திருக்கிறாய்..
வேண்டியதை எடுத்து
தேவையற்றதை
தந்தும் இருக்கிறாய்..
எடுக்கப்பட்டவை...
கிடைத்தவை இரண்டும்
நீ இருப்பதும்,
இல்லாது இருப்பதும் போலத்தான்..
தேவையின் போது இல்லாமலும்,
இல்லாதபோது தேவையாகவும்..
எப்போதும்...
எப்படியாயினும்...
ஒரு விசை
இயக்கம்...
ஓய்வு...
நூறின் ஒற்றை விளக்கம்...
அத்தனையும் ஒன்றில் அடக்கம்..
அந்த ஒன்று...??
தெளிவான குழப்பம்...
ஆச்சரியமான பூமியில்
கேள்விக்குறியுடன்
நானாக நான்
நீயாக நீ..
சில விளங்க முடியாத உண்மைகள்..
நீயாக முயலும் சில நான்களுடன் காலம்
தமிழ்நிலா
3 comments:
தெளிவான குழப்பம்...!
காதலர் மனோ நிலையை விளக்கும் மிக அருமையான கவிதை.
இது காதல் தடை செய்யப்பட்ட பகுதி..
தனபாலன் ஐயா சொன்னது போல் தெளிவான குழப்பம் தான்.
உலகம்.. - கடவுள்.. - ஆணவம் - சில கேள்விகள் பற்றியது...
நன்றி உங்கள் கருத்திற்கு
Post a Comment