என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

புதிதாய் ஓர் உலகம் செய்தேன்



மிருகங்கள் பேசச்செய்தேன்
பறவைகள் சிரிக்கச்செய்தேன்
பச்சைகள் கொண்டு பூமியை மூடி..
செங்கறைகளை கரைத்து
நீரினை பாச்சி மீண்டும்
உலகத்தை செளிக்கச்செய்தேன்..

மொழியில்லா  பாசை பேசும்
முகமில்லா மனிதர் வாழும்
மதமில்லா கடவுள் கொண்டு
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்

உருவம் கொடுத்தேன்
உணர்வை கொடுத்தேன்..
உயிரைக் கொடுத்தேன்...
எல்லாம் கொடுத்தேன்
புதிதாய் ஓர் உலகம் செய்தேன்
ஒன்றை மறந்தேன்
மனிதம் மட்டும் வைக்க மறந்தேன்..

மனிதம் தேடி  கடவுளிடம்  போனேன்
அங்கும் இல்லை.. எங்கும் இல்லை..
பூமியில் எங்கோ இருப்பதாய் சொன்னார்..

கண்டால் சொல்லுங்கள்
தொலைந்து போனதை...
புதிய உலகம் இருப்பதாய் சொல்லுங்கள்..
மனிதம் சிறிது உங்களுக்கும் தருகிறேன்....

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த பாடல் தான் ஞாபகம் வந்தது...

அத்தனை பழமும் சொத்தைகள் தானே...
ஆண்டவன் படைப்பினிலே...
அத்திப் பழத்தை குற்றம் கூற...
யாருக்கும் வெட்கமில்லை...

மூடர்கள் பிறர் குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்...
முதுகினில் ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்...

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்...
நீ சொன்னால் காவியம்...

சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்....
மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா...

எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்...
இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்...

Anonymous said...

வணக்கம்

கவிதையின் வரிகள் அருமை சிறப்பான படைப்பு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Sanjay Thamilnila said...

நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...