உன்னிடம் எப்படிச் சொல்ல
எனது காதலை...
காற்று மூலம்...
கண்கள் மூலம்..
பதில் இல்லை...
நிலவின் தண்மையை
துது அனுப்பவா..?
புல்லின் நுனியில் உட்கார்ந்திருக்கும்
காலை பனியினை
பரிசளிக்கவா..?
பதில் இல்லை..
கவிதை மூலம்
சொல்ல பழகிக்கொண்டேன்...
கவிதை காதலானது..
உன்னிடம் பேசுவதற்காய்
வார்த்தைகள் கவிதை செய்கின்றன..
நா புரள்கிறது கவிதைகள்..
பல தடவை ஒத்திகையும்
பார்த்தாகிவிட்டது...
இருந்தும்
கண்டதும் கதவின் பின் மறையும்
பருவப்பெண் போல
உன்னை கண்டபின் எப்படியோ
காணமல் போய்விடுகின்றன
அத்தனையும்...
என் கவிதைகளை நீ
வாசிக்கிறாயா
தெரியவில்லை ஆனால்
என் கவிதைகளால் நீ
வாசிக்கப்படுகிறாய்...
இனியாவது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்ல..?
தமிழ்நிலா
4 comments:
வணக்கம்
காதல் கவிதை மனதை நெருடியது அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை அருமை ஐயா!
அருமை... ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
நன்றி
Post a Comment