
பார்மகன் மகிழ
பூமணம் கமழ
வானம் சிவக்க
வண்ணம் மயக்க
பூமித்தாயின்
தைமகளே வருக...
கதிரவன் விரும்பி
கதிரினை தந்த
நெல்மணியின்
தலை மகளே
தைமகளே வருக...
உவகை பொங்க
உலகுக்கு உணவு தந்த
ஈடில்லா உழவனின்
தமிழ் மகளே
தைமகளே வருக...
பழையவை எங்கும்
காற்றோடு போகட்டும்
புதியவை இங்கும்
மண்ணில் தழைக்கடும்...
நில மகளே..
தைமகளே வருக...
இளைத்தவை எல்லாம்
ஓங்கி வளரட்டும்..
இனியவை எல்லாம்
பொங்கி பெருகட்டும்..
தைமகளே வருக...
இன்பங்கள் எல்லாம் தருக...
தமிழ்நிலா... 14.01.2014



Tody Now
3 comments:
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html
வணக்கம் !
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ! அருமையான கவிதை
தொடர்ந்தும் எழுதுங்கள் தங்களின் முயற்சிகள் வென்றிட மீண்டும்
மீண்டும் என் இனிய வாழ்த்துக்கள் .
நன்றி மிக்க நன்றி
Post a Comment