என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

(சமாதானம்)வேண்டும்...!!

எனக்கு சின்ன சின்ன கனவுகள் உண்டு, அவை எல்லாம் மாறிய பிறக்கு பூமி மீண்டும் பிறந்து விடும். 


நான் வாழும் போதே
இது மாற வேண்டும்..
நாளும் ஒரு கனவாவது
நிஜமாக வேண்டும் ...

பீரங்கி கொண்டு சேற்று
வயல் உழுதிட வேண்டும்..
கந்தக பூமியிலே சந்தனம்
விளைந்திட வேண்டும்..

ஆயுதம் ஏந்திய கைகளில்
புத்தகம் ஏந்திட வேண்டும்.
உயிர் எடுத்த தோட்ட இனி
பூ தூவ வேண்டும்..

சிறை சாலை மூடி நீ
நூல் சாலை ஆக்கு..
தளங்களை தகர்த்து
பள்ளிகளாய் மாற்று...

அணு உலையை மூடி
சோத்து உலையினை ஏற்று,
தினம் முழு நேர உணவு உண்டு
உன் பசியை ஆற்று...

ஒரு நாட்டு எல்லைக்குள்
ஏது ஒரு சண்டை..
ஒரு தாயின் மக்களாய்
வாழ்ந்து நீ காட்டு...

அயல் நாடு உன் சொந்தம்
யுத்தம் ஏனோ..
நாடுகள் தோறும்
நீ மங்களம் பாடு....!!

விஞ்ஞான அறிவுகள்
என்றும் உயிர் காக்க வேண்டும்...
மெஞ்ஞானம் மறவாமல்
உயிர் வாழ வேண்டும்...

ஓசோனில் துளைகளை
நீ நீக்க வேண்டும்..
உனோட ஆயுள் நூறு அல்ல
முன்நூறாக வேண்டும்...

ஜாதிகள் இல்லாத புது
உலகம் வேண்டும்...
அங்கே நான் மீண்டும்
பிறந்திட வேண்டும்....

மதங்கள் அது மடமை
அதை மறந்திட வேண்டும்..
எல்லா கடவுளும் ஒரு
மதம் என்று
வாழ்ந்திட வேண்டும்

வசை பாடும் மனிதர்
எல்லாம் கவி பாட வேண்டும்.
ஏழைகளின் வாசல்
திறந்திட வேண்டும்..
பணக்காரர் வேசம்
இனி போக வேண்டும்...

நாகரிக மோகம்
தள்ளி போக வேண்டும்..
காமம் இல்லா காதல்
என்றும் வேண்டும்...
தந்தையின் பேர் சொல்லும்
பிள்ளைகள் வேண்டும்..
பத்தினி பெண்கள் மட்டும்
உயிர் வாழ வேண்டும்........

தமிழ்நிலா

காற்றுவெளி february 2011

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...