என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

வறுமையின் நிறம் சிவப்பு

நிஜமான அனுபவம் ஒன்று..


குடிகார கும்பல்
ஒரு தெருவோடு நிக்க
நான் அருகோடு போனேன்..
அவன் தள்ளாட்ட நடையில்
என் பின்னாலே வந்து
என்னை நையாண்டி பண்ணி
தன் விட்டுக்குள் போனான்...

முத்தத்தில் உருளும் பானை
அங்கு யுத்தத்தை சொல்லியது..
என் எண்ணத்தை கிள்ளியது..

பானையில் ஒட்டிய சோற்றில்
வியர்வையின் வாசம்..
வறுமையை சொல்ல,
அப்பன் உடம்பில் மதுவின்
வாசம் அவன் கொடுமையை
சொல்லியது...

மின்னி மின்னி எரியும்
கை விளக்கில் - பிள்ளை
கண்ணீரில் புத்தகம்
நனைகிறது...

அப்பன் மூச்சினில் 
விளக்கணைய அவள்
கல்வியும் சேர்ந்தே அணைகிறது.

தாயின் கன்னத்தில்
தந்தையின் கை தடம்...
அவள் மெல்லிய உடம்பினில்
அங்கங்கு செந்தடம்..

பிள்ளையின் உள்ளம் 
சொல்லியது..
வறுமையின் நிறம் 
சிவப்பென்று..

தமிழ் நிலா 

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...