இணைய தளங்களில் பரவலாக பேசப்பட்ட செய்தி... உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் நடக்கின்றன... தடுக்க படவேண்டும்....
பாடசாலை போகாம நீ
நடத்துகிறாய் குடும்பம்..
வெள்ளை சீருடையே உன்
குழந்தையின் படுக்கை...
உன் தோழிமார் போகையில்
மறைந்திருந்து பாக்கிறாய்..
அவள் தூக்கும் புத்தகம்
சுமை என்றதாலா நீ
குழந்தையுடன்
குடும்பத்தை சுமக்கிறாய்...
உன் அம்மாவின் பொட்டை
பறித்து தான்
நீ வாழ நினைத்தாயா??
உன் கழுத்தில் கயிறேற
அப்பாவின் கழுத்தில்
மாட்டினாயா??
இளமையை பரீட்சிக்க
காதலில் காமத்தை கலந்தது விட்டாய் ....
மோகம் முடிந்ததும் நீ
முகம் மூடி அழுவதும் ஏனோ..
சிறு வயது திருமணங்கள்
குறைந்துவிட்ட போதிலும்...
இளவயது கர்ப்பங்கள்
குறையவில்லை இங்கே....!!
விதம் விதமாய் காதல் வந்து
வயித்தினையும் நிரபிப்போக..
வாழ்க்கையினை காப்பாற்ற
இங்கே குழந்தை
கிணத்துக்குள்ளும் நிரம்பிவிடும்...
தமிழ்நிலா
காற்றுவெளி May sp 2011
காற்றுவெளி May sp 2011