
உன் ஒவ்வொரு கேள்வியும்
பலவிடைகளுடனேயே ஆரம்பிக்கிறது..
இருப்பினும் உனக்காய் ஒரு கேள்வி தயார்..
நீ ஒரு இனத்தின் முதல் பிரதிநிதி
நான் அந்த இனத்தின் கடை ஊழியன்..
ஓய்ந்த மழையின் கடைசித்துளியை
நேசிக்கும் புல் போலே எப்போதும்...
இழந்தவற்றைக் காதலிக்கிறேன்..
நான் உன்னையும் தான்...
அதனால் உன்னிடம் ஒரு கேள்வி...
நீ எதையோ பெறுவதற்காய் உன்னையே இழந்தாய்..
உன் இழப்புகளை நான் எனதாக்கிக்கொண்டேன்
என்னை நீயாக்கிக்கொண்டேன் - இருந்தும்
எல்லாவற்றிலும் வேறுபட்டிருக்கிறேன்..
என் விருப்பங்களை நீ நிராகரித்தாய்
நீ விரும்பியவற்றை நான் வெறுக்கிறேன்...!
உன் தாகம் எதன் மேல்..??
உன் கேள்வி தான்.. அணையா விளக்கல்ல இது
விளக்கை அணைத்துவிட்டு
உன் பதிலுக்காய் காத்திருந்தேன்..
கடந்து போன இருண்மையோடு
காணமல் போனது அந்த ஒற்றைக் கேள்வியும்..
தமிழ்நிலா
2 comments:
வணக்கம்
ரசிக்க வைக்கும் கவிதைவரிகள் ....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
nice lines
Post a Comment