என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

நாகரீக மோகம்...


நாகரீம் என்னும் சொல் எனை மிகவும் உறுத்துகின்றது.... கலாச்சாரத்தை நேசிக்கும் தமிழன் என்பதால் சிறு விடையமும் எனை வாட்டுகின்றது....




ண்பர்களுடன் நகரத்து வீதியிலே
நடை பயில போனேன்...
நறும் பூ மணத்தில்
நானும் வாடி நின்றேன்....!!

காதிலே கடுக்கண்
கையிலோ காப்பு...
கழுத்திலோ சங்கிலி
கூந்தலோ இரண்டடி...

பின்னழகு எனை வாட்ட
முன்னழகை பார்த்து நின்றேன்..
ஐயோ சொக்கிப் போனேன்....
அது அவள் இல்லை
அவன் என கண்டபிறகு...!!

எங்கோ பழகிய முகம்
என்றோ கேட்ட மொழி...
ஐந்தடி உயரம்...
அழகிய தோற்றம்....
சாக்குத் துணியில் ஒரு
முக்கால்....!!
காற்று பிடிக்க
கை இல்லா ரீ சேட்..!!

தலை கூட கிப்பி... பாவம்
அவன் தலை மயிரோ சிவப்பு...
கைகளை பிடித்திடும் போது தான்
உணர்ந்தேன்... நண்பன் அல்ல
நண்பி என்று.....!!

கலாச்சாரத்திடம் கல்லெறி
வாங்கிய எனக்கு ஒன்று மட்டும்
ஆறுதல் தந்தது....!!
திருவிழா தேரில்
தெருவில்
திரு உலா போன அம்மனாவது
பச்சை பட்டுடுத்தி
போனதை பார்த்து....!!

தமிழ்நிலா 


காற்றுவெளி May 2011

உதயன் December  2013



உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...