என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

காரணம் என்ன,,,,,,,,,,,???


வீதியால் வந்தபோது ஒருகாட்சி நிறையவே பாதித்தது, அது போதை தெரிகிறது, உணர முடிகிறது காரணம் தான் தெரியவில்லை......



சித்திரை வெயில்
சிந்திய வெக்கையில்,
வீதியில் போன எனக்கு..
உச்சி நனைய
உள்ளங்கால் குளிர..
தென்றல் வருடினாள்...
வானத்து மகளோ மெல்ல
வந்து என் கள்ளமில்லா
உள்ளம் தடவினாள்....!!

வானத்தில் சிறகடித்தே
பறந்து போனேன்...
எனை மறந்தே நான்
போனேன்.......!!
மின்னலின் வெளிச்சத்தில்...
என் கண் பிடித்திட்ட
படம் தான் என்ன. ......???

பார்க்க முடியாத...
உணர்வுகளையே கலைத்த...
அந்த படம்....!!
வீதியின் ஓரம்..
கிடக்கும் அந்த மனிதன்
யார்....???
வெள்ளத்தில்
மிதக்கும் அந்த இளைஞன்
யார்.....????

விடைதேடி அருகில்
போனேன்...
புரிய புதிராயனேன்...
கை கொடுத்தேன்..
கால்கள் இல்லை..
தோள் கொடுத்தேன்....
முடியவில்லை.....!!
அந்த மரக்காலில்
வேகம் இல்லை.....

இதுவரை காணாத
முகம்...
போராளியோ என
நினைக்க தூண்டும்
அவன் கரம்....
சோர்ந்து போன
அந்த மனம்.....!!!

கைகளில் இருந்து
விடுபட்ட...என் கைகளை...
பற்றி...நன்றி சொல்ல
துடித்த உதடுகளை பார்த்து....
உள்ளத்தின் உணர்வுகள்
என நினைத்தேன்..
வாய் தடுமாறிய போது
போதையால் என
தெரிந்தது கொண்டேன்......

இந்த நினைவுடனே
புறப்பட்ட எனக்கு....
விடை தெரியா கேள்விகள் பல....

தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...