நண்பர் ஒருவரின் தாயாரின் மரணவீட்டுக்கு சென்று வரும் சமயம்...
நாலு எழுத்து மரணம்
என்னை துரத்துகிறது..
ஆண்டு ஒன்று கடக்கையில்
அது என்னை நெருங்குகிறது..
படுக்கையில் என்னோடு
படுக்கிறது...
நடக்கையில் நிழலாக
தொடர்கின்றது...
பிறந்து இங்கு வந்துவிட்டால்
இறந்து தான் போகவேண்டும்
அதற்கு இடையினிலே பலமுறை
இறந்து தான் ஆகவேண்டும்..
அம்மா அப்பா உறவினால்
இங்கு வந்தோம்..
தம்பி தங்கை உறவினை
கொண்டு வந்தோம்..
மனைவியோடு மகளினை
இங்கு பெற்றோம்..
போகும்போது கொண்டுபோக
எதை எடுத்துக்கொண்டோம்..
நிலை இல்லா வாழ்வினிலே
நிலை தேடி அலைந்து விட்டோம்..
அன்பு மட்டும் நிலை என
புரியாமல் நன்றிகளை மறந்துவிட்டோம்..
மது மாதுவில் பிடிப்பு வந்து
தலைகீழாய் நடக்கிறோம்..
பட்டு தெளிந்தபின் இனி
பட்டினத்தார் பிடிக்கும் என்போம்..
தமிழ்நிலா
தமிழ்நிலா
0 comments:
Post a Comment