என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

கட்டைகாடு




போர்
========
போர் விட்டு சென்ற எச்சம்.
திரும்பிய இடம் எல்லாம் வடுக்கள்..!!


மீள் குடியேற்றம்
===============
இருந்த இடத்தில் இருத்துகிரார்கள்

மாடியில் அல்ல கோடியில்....!!


நிவாரணம்
===========
கொட்டிலுக்கு கூரை போட
வெய்யிலில் தகரத்துக்காய்..!!


வறுமை
==========
பசியின் முகவரி தேடினேன்
அங்கே வறுமை என்று இருந்தது....!!


பாசம்
=========
பிள்ளை இரவில் உண்ண
பகல் முழுதும் காய்கிறார்கள் ...!!


தொழில்
=========
சோத்தில் கை வைக்க

கடலில் மிதக்கிறார்கள் ..!!



ஏக்கம்
======
போனவர் வரும் வரை பெண்கள்
கடலில் கண்ணீரை கலக்கிறார்கள்...!!



கல்வி
======
அணைந்த விளக்கில் இருந்து வெளிச்சம்
குடிசையில் குழந்தை படிக்கிறது..!!


by sanjay தமிழ் நிலா...

(on 27.07.2011 @ கட்டைகாடு visit)

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...