என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

கிரீஸ் பூதம் வருதாம்...!!

நாட்டை குழப்பிவரும் கிரீஸ் பூதம் காரணமாக எமது யாழ் நடந்த கொடிய நிகழ்வு.


கண்ணயர நான் வந்து
கால் நீட்டி கிடக்கையிலே..
கிரீஸ் பூதம் வருதென்று
கத்திக் கேக்கையிலே 
கண்திறந்து எழுந்துவிட்டேன்..

கேற்ஆல அவர் ஓட 
ரோட்டாலே சனம் ஓட
சப்பாத்துக்கால் ஓட..
துப்பாக்கி வேடிகேக்க..
இரவெல்லாம் பகலாக 
கண் இரண்டும் அடைகாக்க
கரண்ட் நிக்கும் என 
விளக்கு எடுக்க போகையிலே..

மரம் தாவும் கிரீஸ் பூதம்
மதில் தண்டி வரக்கண்டும் 
மனதாலே பயம் கொண்டு
மங்கை நான் பதுங்கவில்லை 

வந்தவன் தமிழன் இல்லை
அவன் நெஞ்சில் ஈரம் இல்லை..
கையில் கூர் இருக்கு..
குத்திவிடும் துணிவிருக்கு...

கதவை உடச்சு கால் ஒன்று
வருகையிலே - கையில் 
விறகெடுத்து விட்டு விட்டேன்..
என் உடலை காத்து விட்டேன்..

"கண் விழித்த நேரம் முதல் 
கண்ணயரும் வேளைவரை
பிறர்க்காகவே வாழும் 
பெண்ணினமே...

எழுந்திடு.. உன்னையே 
நீ காத்திடு...!!"

தமிழ் நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

1 comments:

Anonymous said...

very nice sanjay

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...