வெடிக்க
வண்ணமத்தாப்பு,
சுவைக்க
இனிப்பு பலகாரம்,
குடிக்க
கூலாக குடிபானம்,
உடுக்க
உயர்ரக புடைவை,
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...
இது ஒருவகை தீபாவளி..!!
பட்டாசு தொழிற்சாலையில்
விடுமுறை இல்லாமல்
குழந்தை தொழிலாளர்கள்...
குதுகலிக்க
தியேட்டர் படங்கள்....
காதலிக்க
ஆண் / பெண்...
இது ஒருவகை தீபாவளி..!!
விடுமுறை இல்லாமல்
குழந்தை தொழிலாளர்கள்...
மலையக தோட்டங்களில்
போனசும் இல்லாமல்
பெண் தொழிலாளர்கள்...
அரபு வனங்களில்
சம்பளமே இல்லாமல்
இளம் தொழிலாளர்கள்..
உணவே இல்லாமல்
கூலி தொழிலாளர்கள்...
ஒழுகும் குடிசைகளில்
உடையே இல்லாமல்
முதிய தொழிலாளர்கள்..
இதுவும் ஒரு வகை தீபாவளி...!!!
உலக தொழிற்சாலையில்
நாம் எல்லாம் தொழிலாளர்கள்.. தான்
இந்த நாளில் எல்லோரும்
முடிவெடுங்கள்...
ஒருவர் ஒருவரையாவது
வாழவையுங்கள்..
--------
அன்புடன் sanjay தமிழ் நிலா
காற்றுவெளி December 2011
தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) November 2012
காற்றுவெளி மார்கழி 2011 இதழின் ஒரு மதிப்பீடு
தமிழ்நிலா, நாம் குதூகலமாகத் தீபாவளி கொண்டாட வைக்கப் பட்டாசுத் தொழிற்சாலைகளில் வறிய சிறுவரும், மலையகத் தோட்டங்களில் பெண்களும் எவ்வாறு விடுமுறைகளின்றி விய-ர்வை சிந்துகின்றனர் எனப் பாரதியையே எம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தித் தன் கவிதையால் அழவே வைக்கிறார்.
பேராசிரியர் கோபன் மகாதேவா
21-12-2011