இப்போதெல்லாம்
தினமும்
வாசலில் நிக்கிறேன்..
என் வீட்டை
தாண்டி செல்லும்
தபால்காரனை எதிர்பார்த்து...
"அம்மா நான் சுகமாக உள்ளேன்
விரைவில் வருகிறேன் உன்னிடம்"
என ஒரு வரி கடிதமாவது
வராத என்று...
என்னை மலடி என்றார்கள்
வலிக்காத நாட்களே இல்லை...
கடவுள் உருவில்
கல்லை கண்டாலே
உன் அப்பா நேர்த்தி
வைக்காமல் போனதே இல்லை
தவமிருந்து பெற்றோம்
தரணிக்கே கொடுத்துவிட்டோம்..
கண் திறந்தான் கந்தன்
ஏன் கண்களை மூடி விட்டான்...
அழாத நாட்களே இல்லை..
நிச்சயம் ஒரு நாள்
வருவாய் என்ற நம்பிக்கையில்
மாலை இல்லாமல் உன் படம்..
என்றோ ஒரு நாள்
வருவாய் என்ற ஏக்கத்திலேயே
என் விடியாத பொழுதுகள்...
அன்புடன் sTn
காற்றுவெளி January 2012
Feb 2012 இல் விமர்சனம் - ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
-----------------------------------------
தமிழ்நிலாவின் "அன்பு மகனே " நெஞ்சை பிழியவைக்கும் நல்லதொரு கவிதை
0 comments:
Post a Comment