என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

ஒற்றை ரோஜா...



ப்போது பூக்கும் 
இந்த ஒற்றை ரோஜா
நேற்று அப்படியே 
பச்சையாக தான் இருந்தது...
இப்போ ஒரு வெள்ளை மொட்டு,

குங்கும நிறம்
என்று தான் நட்டேன்...
நேற்றுவரை நீர் ஊற்றினேன் 
இன்று தான் தெரியும்..

அழகிய பூக்களுக்கு
அசிங்கமான முள்ளு எதற்கு..
வாடாமல் இருப்பது
சிலகாலம் தானே..
ஆச்சார முட்டைகளில்
மயிர்களைப்போல்
மரம் எல்லாம் முள்ளு..

தேனீக்களின் அணிவகுப்பு
தொடங்கி விட்டது
பக்கத்து மரம் நோக்கி..
முட்கள் என்ன செய்யும்...
பூக்கள் நினைத்தால்
மட்டும் தான் முடியும்...

இவையோ தேனீக்களை
கவரும் நிறமும் இல்லை..
என்ன செய்யப்போகின்றன..?
அவையும் மணம் பரப்பும்
கொய்து விடாதே.. மனிதா 

எப்போது பூக்கும்
இந்த ரோஜா...!!

விதைவைகளே தயாராகுங்கள்..
உங்களுக்காய் ஒரு புது தோழி...!!

தமிழ்நிலா

விதைவைகள் ஒன்றும் அதிஷ்டம் இல்லாதவர்கள் இல்லை. அவர்கள் வாழ்த்தினால் நீங்கள் இன்னும் கூட வாழலாம், என்னை போல் ஆகிவிடாத என்று மட்டும் தான் வாழ்த்துவார்கள். வலிகள் மட்டுமே சொந்தமான அவர்களை,  மூட நம்பிக்கையினால் நீங்களும் வதைக்காதீர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...