மக்கள் எல்லோருக்கும்
ஒரு செய்தி...
விடிகையில் வரும் வெள்ளியை
சில நாட்களாய் காணவில்லையாம்..
கண்டு பிடித்து தருபவர்களுக்கு
பொற்காசுகள் வழங்கப்படும்
ஒஹ்ஹ்ஹ
மீண்டும் மன்னராட்சியா..??
மீண்டும் குடும்ப ஆட்சியா??
ஜயோ மீண்டும் சர்வாதிகாரமா??
அப்பாவின் பின் மகன்..
மாமாவின் பின் மருமகன்..
கணவனின் பின் மனைவி..
கால்நடையாய் வந்து
களைப்பாருவோர் எல்லாம்
மந்திரிகளாம்...
காற்றில் அடிபட்டு
கரையோதுங்குவோர் எல்லாம்
அமைச்சர்கள் தானே..
ஜனநாயகம் எங்கே
விடியலை தேடுகிறதோ..???
விடிவெள்ளி எங்கே
ஜனநாயகத்தை தேடுகிறதோ..??
தமிழ்நிலா
0 comments:
Post a Comment