பேனா முனைகளில்
என் வலிகள்...
வலிகளில் தாகம்
இன்னும் ஒரு தடவை
மாறுமா இந்த
உலகத்தின் தலை எழுத்து ..??
இனங்கள்
மதங்கள்...
மொழிகள்,
சாதிகள்,
பேதங்கள்..
நாகரீகம்..
எத்தனை
எத்தனை
என்னால்
மாற்றமுடியவில்லை..
மடமைகளை
வளைக்க முடிந்தது
உடைக்க முடியவில்லை..
ஏனெனில்
நான் பாரதியில்லை..
இருந்தாலும்
எனக்குள் ஒரு பாரதி..
தமிழ்நிலா
காற்றுவெளி June 2012
0 comments:
Post a Comment