என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

ஆகாய நிலவே




வான புத்தகத்தில்..
எழுத்துகள் சிதறிக்கிடக்கின்றன..
நட்சத்திரங்கள்...
*****

நடுப்பக்கத்தில் வழமை போல்
சோக கவிதைகள் தான்..
அமாவசை இரவு..
*****

அட்டை பக்கத்தில்
அழகான தேவதையின் முகம் ..
நிலா...
*****

கவிதைகள் எழுதும்
முன்னுரை
அதிகாலைப்பொழுது..
*****

நீண்டு கொண்டு போகும்
ஏழு வரி கவிதை..
வானவில்...
*****

சின்ன சின்ன ஹைகூக்களின்
அணிவகுப்பு..
வெண் மேகங்கள்..
*****

இதோ கவிதைகளின் காதலன்
வருகிறான்..
சூரியன்..
*****

தமிழ்நிலா 13.02.2014

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

2 comments:

Athisaya said...

வணக்கம் சொந்தமே!மிக நீண்ட காலங்களின் பின் சந்திப்பது மகிழ்வு.முகநூலில் முன்பு ஒரு காலம் கண்டதாய் ஞாபகம்.!வழமை மாறாத அதே அழகுடன் தொடர்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.சந்திப்போம்.!

Sanjay Thamilnila said...

நன்றிகள் உறவே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...