உலகத்து கவிஞர்களே
உங்கள் பேனாவை
ஒருமுறை மூடிக்கொள்ளுங்கள்...
கலாச்சாரம் அழிகிறது,
தமிழனை காணவில்லை....
அங்கம் தெரிகிறது,
ஆடைகளை காணவில்லை...
காமம் கனக்கிறது,
காதலை காணவில்லை...
ஆசை அழைக்கிறது,
அன்பை காணவில்லை...
பாசம் நடிக்கிறது,
பண்பை காணவில்லை...
படித்தும் அங்கே
பணிவை காணவில்லை...
விஞ்ஞானம் வளர்கிறது,
மனிதாபிமானத்தை காணவில்லை...
உலகத்து கவிஞர்களே
உங்கள் பேனாவை
திறந்து கொள்ளுங்கள்...
காதலை பாடும் கைகளால்
காவியம் எப்போது தரப்போகிறீர்..???
தமிழ்நிலா
0 comments:
Post a Comment