நீ வெறும் கனவுக்கு பிறக்கவில்லை..
நிஜத்துக்கும் வாழ்க்கைப்படவில்லை...
அதனால் கனவுகளை விடநிஜத்தையே அதிகம் நேசி...
இருப்பினும் கனவு காண்பதை
நிறுத்திவிடாதே...
கனவுகள் தானே நிஜமாகின்றன...
உன் முடிவுகளை நீயே எடுக்கப் பழகிக்கொள்..
ஆனால் முடிவெடுப்பது கடினம்..
காரணம் முடிவுகள் நிரந்தரமானவை அல்ல...
உன் கனவுகளுடன்,
பெற்றோரின் சராசரி கனவுகள்
போட்டி போடுகின்றன..
முடிவில் எது ஜெயிக்கும் என்பது
யாருக்கும் தெரியாது...
சில நேரங்களில் இரண்டும் தோற்பதும் உண்டு...
வாழ்க்கை என்பது கண்ணாடி போல,
இலகுவில் உடைந்து விடலாம்...
சில நேரங்களில் மீண்டும் ஒட்டவைப்பது
முடியாமலும் போகலாம்...
எமது செய்கைகள் மீள
எமக்கே திரும்புவதும் உண்டு...
ஒருவனை அழவைத்தால்,
அவனை விட நாமே அதிகம் அழுகின்றோம்...
உறவுகள் தவிர்க்கப்பட முடியாதவை...
ஆண் பெண் உறவு என்பது
காதல் மட்டும் என்பது இல்லை...
உறவின் எல்லை நட்பையும் அடையலாம்..
காதல் நட்பில் தான் முடிதல் ஆகாது...
இரண்டையும் அலட்டிக்கொள்ளாதே..
மடமைகளும் பாகுபாடும் தான்
மிஞ்சிய சொத்துகள்...
ஜாதிகளும், மதங்களும் தான்
எமக்கு விட்டு சென்ற சீர்வரிசைகள்...
சமூகமே ஒன்றிணைந்திருக்கையில்
நீ மட்டும் என்ன செய்வாய்...
தட்டிக்கேட்டால் நீ தான் குற்றவாளி..
மௌனமாக இருந்தாலும் கூட....
உன்னை நினைத்து சிரிக்கின்றேன்...
உனக்காய் மட்டும் அழுகின்றேன்..
இறப்பதற்காக மனிதன் பிறப்பதும் இல்லை,
பிறந்த மனிதன் இறக்காமலும் இல்லை...
உன்னை சுற்றி குழிகள்
போட்டி பொறமை துரோகம்...
நீயாக வீழா விட்டாலும்
விழுத்துவதற்காய் பல கைகள்...
மீள துக்குவதற்கு கையே இல்லை...
நம் கையே நமக்கு உதவி...
தடை தாண்டி போகையில்
தடைகள் சிலவேளைகளில் தட்டுப்படலாம்..
ஆனாலும் தொடர்ந்து ஓடு..
தோற்றுவிடமாட்டாய்...
தமிழ்நிலா
0 comments:
Post a Comment