நிலா நம் முற்றத்தை
தொடுவதில்லை...
வானமோ வானவில்லோ
வந்ததாய் தெரியவில்லை..
மழை மட்டும் அப்போ அப்போ
வந்து போக தவறுவதில்லை...
இடை இடையே தவிக்கவிட
மறப்பதும் இல்லை....
மழை...
வானக்கடலின் முத்து..
மேகத்தாயின் ஆனந்த கண்ணீர்..
மின்னலுக்கும் இடிக்கும்
பிறந்த குழந்தை..
தென்றலின் காதலி..
தூவானத்தின் நண்பி..
பள்ளி நாட்களில்
முதல் மழை...
குடை இல்லாத நாட்களில்..
புது மழை...
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
ஒய்யாரமாய் நடை...
எல்லாம் இழக்கப்பட்டிருந்தது...
அம்மாவின் எதிர்ப்பை தாண்டிய
மழையில் மண் விளையாட்டு...
அப்பாவின் அன்பை விரும்பாத
காகித கப்பல்களில் பயணம்..
காதலியின் அரவணைப்பை
தாண்டிய மழைக்குளியல்...
எல்லாம் காணமல் போயிருந்தன..
மழை நம்மை
நனைக்கவே யோசிக்கின்றது......
இருந்தும் எதோ ஒன்று
தடுக்க துடிக்கிறது...
நனைக்கவே யோசிக்கின்றது......
இருந்தும் எதோ ஒன்று
தடுக்க துடிக்கிறது...
மழையே...
நீ தீண்ட வருவாய் என்று
காத்திருகின்றது மண்...
நீ சுவாசம் தருவாய் என்று
இன்னும் உயிரோடு செடிகள்...
தாகத்தில் நதிகள்
தொண்டை வறண்டு இருக்கின்றன..
காமத்தில் மயில்கள்
தோகை விரிக்க நினைகின்றன...
ஏழைகள் வீடு மேயப்பட்டு விட்டன...
வீதிகளும் போடப்படுகின்றன...
வரப்புகள் உயர்ந்து விட்டன
இன்னும் என்ன தயக்கம்..
தமிழ்நிலா
1 comments:
அருமையான மழை நினைவுகள்.
Post a Comment